காவல் துறையினரின் குழந்தைகளில் 10 , 12 ல் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை



The aim of education is the knowledge, not of facts, but of values -William Ralph Inge.
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குழந்தைகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மேல் படிப்பிற்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினேன் .
எனது உரையின் முக்கிய அம்சம் :-
🎯 அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .
🎯உங்கள் வெற்றிக்கு பின் இருக்கும் உங்களது பெற்றோரின் இரவு நேர கண்விழப்பிற்கு நன்றி கூற மறவாதீர்கள் .
🎯 உங்களது மேற்படிப்பு உங்களை பொருத்தவரை உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆனால் உங்களை பெற்றோரின் இலட்சியம் என்பதை மறக்க வேண்டாம்.
🎯பரிசு வாங்கும் இடத்தில் உள்ள நீங்கள் அவரு சில ஆண்டுகள் கடினமாக உழைத்தால் பரிசு கொடுக்கும் என் இடத்திற்கு வந்து விடலாம்.
🎯 உங்கள் பெற்றோருக்கு அதிகாரியாக வந்து விடலாம். முயற்சி செய்யுங்கள் . உங்களால் முடியும்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல்துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்