காவலர்களுக்கான “நிறைவாழ்வு பயிற்சிமுகாம்” நிறைவு விழா


நெல்லை மாநகர ஆயுதப்படையில், காவலர்களின் மன அழுத்தத்தை போக்க, நேற்று 80வது வார நிறை வாழ்வு பயிற்சி முகாம் ( 28-02-2020) மருத்துவ பரிசோதனையுடன் தொடங்கப்பட்டது. இந்த முகாமின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே கலந்துரையாடி இப்பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் காவலர் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கினேன். இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரத்திலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப உறுபினர்கள் கலந்து கொண்டு பயன்பெறுவர். என்றும் அன்புடன் ச.சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்