கங்கைகொண்டான் சோதனைச் சாவடியை ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்





திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களின் மேற்கூரையில் ஆட்களை ஏற்றி வருவதால், அவர்களை கண்கானிக்க உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டு மேலிருந்து காவலர்கள் 24 மணிநேரமும், கண்காணித்து வருவதை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
இதனையடுத்து இன்று(06.05.2020) கங்கைகொண்டான் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு வரும் *காவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அவர்களுக்கு குளிர்பானங்கள வழங்கியும்* மற்றும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க *முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் Sanitizer ஆகியவற்றை வழங்கினார். மேலும் அனைவரும் பணிபுரியும் போது முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து, பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.*