காவலன் SOS செயலியை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக SAFETY உங்கள் CHOICE குறும்படம்
காவலன் SOS செயலியை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் SAFETY உங்கள் CHOICE என்ற தலைப்பில் நல்லதை பகிர்வது நம்கடமை வாட்ஸ்அப் நண்பர்கள் தயாரித்த குறும்படம் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தின் கலையரங்கில் வருகிற பிப்ரவரி 2ம் தேதி ஞாயிறு காலை நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தமாரோ மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகியோர் வெளியிடுகிறார்கள் நெல்லை மங்களம் டிரேட்டர்ஸ் மற்றும் நெல்லை ரஜினி மக்கள் மன்றம் இணைந்து தயாரித்துள்ள இந்த குறும்படத்தில் இயக்குனராக நண்பர் வெங்கட் ராமும், ஒளிப்பதிவு இயக்குனராக சிகாமணியாகிய நானும் இணை ஒளிப்பதிவாளராக கௌசிகா டிஜிட்டல் குமாரும் இசையமைப்பாளராக தங்கராஜேஷ் அவர்களும் திரைக்கதையை சுரேஷ் அவர்கள் அமைக்க இன்னும் பல நண்பர்கள் பணியாற்றி உள்ளனர் நண்பர்கள் அனைவரும் குறும்பட வெளீயீடு ஞாயிறு என்பதால் அன்று விழாவில் கலந்து கொண்டு குறும்படத்தை பார்த்து உங்கள் முகநூல் வழியாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் அனைவர் பார்வைக்கும் கொண்டு சென்று தங்கள் கருத்துகளையும் பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
