"காவலன் S.O.S" காவல் துறை, "செயலி" குறித்த, "சிறப்பு பயிலரங்கம்",
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், "அன்னை ஹாஜிரா" பெண்கள் கல்லூரியில், இன்று (16-12-2019) திங்கட்கிழமை காலையில், "இரண்டு" அமர்வுகளாக, மாணவிகளுக்கு, மிகவும் பயனுள்ளதாக, கல்லூரி தலைவர் Er.S.K.செய்யது அஹமது தலைமையில், நடைபெற்றது.கல்லூரி பொருளாளர் "நல்லாசிரியர்" O.K. ஜாபர் சாதிக், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். " முதல்" அமர்வினை, மாநகர காவல் "துணை ஆணையர்" திருமிகு. ச.சரவணன் துவக்கி வைத்து, "இந்த செயலியைப், பயன்படுத்துவதற்கு, "பெண்கள்" அனைவரும், "கண்டிப்பாக" தெரிந்து வைத்திருக்க வேண்டும்!" என்று, அறிவுறுத்தினார். அவரை,"மூத்த பத்திரிக்கையாளர்" நாவலர், அல்ஹாஜ். Rtn. TSMO.ஹஸன், "அறிமுகம்" செய்து வைத்தார். மாநகர காவல், "குழந்தைகள் பாதுகாப்பு" பிரிவு,"ஆய்வாளர்" திருமதி.C.எழில் அரசி, "காவலன் S.O.S." செயலி குறித்து, "செய்முறை விளக்கம்" அளித்தார். கல்லூரி பொறுப்பு முதல்வர் திருமதி.ஷப்ரீன் முனீர், "வாழ்த்துரை" வழங்கினார்.




