top of page

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி வரவேற்றார். மேனாள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன் வண்ணமுத்து குழந்தைகள் தின சிறப்பு பாடலையும் குழந்தைகளுக்கான நீதிக் கதையும் சொல்லி குழந்தைகளை மகிழ்வித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. வெற்றிவேல், முன்னோடி வங்கி மேலாளர், கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கவிஞர் சுப்பையா, தபால்தலைகள் சேகரிப்பாளர் ராதாகிருஷ்ணன், அப்பாவு லெனின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


13 views0 comments
bottom of page