top of page

கால்களை நனைக்கும் குழந்தைகளும் ஊரமாகுமர கடலும்” கவிதை புத்தகம் 

திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் போது கவிஞர் . பே.ராஜேந்திரன் அவர்களின் “ கால்களை நனைக்கும் குழந்தைகளும் ஊரமாகுமர கடலும்” கவிதை புத்தகம் பொதிகை தமிழ் அறக்கட்டளை மூலம் வெளியிடப்பட்டது. பணிநிமித்தம் அந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமல் போனது . நல்லதை பகிர்வது நம் கடமை குழுவினரின் இன்றைய நிகழ்வின போது இப்புத்தகத்தை பெற்றுக் கொண்டேன் . இருபது வயது இளைஞருக்குரிய துள்ளலுடன் சமூகம் , காதல், இயற்கை, சூழல் என பதிவு செய்துள்ள கவிதைகள் மிக சுவாரசியமானவை. அவரது பத்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது . கவிஞர் பேராவின் தமிழ்ப்பணி தொடரட்டும் நான் ரசித்த சில கவிதைகள் உங்களை பார்வைக்கு . எல்லோரும் பேசுகிறார்கள் அவரவர் தாய்மொழியில் நாம் மட்டும் தான் பேசுகிறோம் மொழிகளின் தாய்மொழியில் அழகாயிருக்கிறது மரம் கிளைகள்தோறும் பறவைகள் அன்று வீடுதோறும் திண்ணைகளும் அதில் தாத்தா பாட்டிகளும் இன்று வீடுதோறும் சுற்றுச்சுவர்களும் காமிராக்களும் தனக்கான களத்தை தயார் செய்பவனே வெற்றியாளனாகிறேன் சிறகுகள் இல்லாமலே தேவதையாகலாம் புடவையை அணிந்துகொள்கையில் நான் நிமிர என் தந்தையார் குனிந்த இடங்கள் எத்தனையோ #அன்பைவிதைப்போம் #Tirunelveli என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்

3 views0 comments
bottom of page