கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கிவைத்தார்.





திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் ஆகியவை இணைந்து கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கிவைத்தார். ஆட்டோவில் சென்று பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் மக்களிடையே கொரோனா நோய் குறித்தும், முககவசம் அனிவதன் அவசியம் மற்றும் கை கழுவுதலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதுடன் முககவசங்களையும் வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கஎள் அதிகம் கூடும் கடைகளில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்த நோட்டீசை ஒட்டினார்..