கொரோனா வைரசின் தீவிரத்தன்மையை உணராமல் சாலைக்கு வருவது கவலையளிக்கிறது.

நெல்லை மாநகர காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், காவலர்களும் களத்தில் இறங்கி பணியாற்றுகிறோம். மக்கள் பலரும் கொரோனா வைரசின் தீவிரத்தன்மையை உணராமல் சாலைக்கு வருவது கவலையளிக்கிறது.
காவல்துறைக்கு ஒத்துழைக்க கோருகிறோம்.
இது ஊரைச்சுற்றுவதற்கான நேரம் அல்ல. நண்பர்களை பார்க்கவோ, விளையாடவோ செல்லும் நேரம் அல்ல. நாட்டு மக்களின் உயிர் காக்கும் நேரம்.
படத்தில் - மக்களை வீட்டிலிருக்க கோரும் SI மகேஷ்குமார்.
சரவணன்
காவல் துணை ஆணையர்.
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்