top of page

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் (27.02.2020) நாங்குநேரி காவல் நிலையம் இ.த.ச பிரிவு 341,294(b),307,506(ii)IPC, குற்ற பிரிவு 294(b),352,506(ii)IPC, வழக்குகளில் எதிரியான வானுமாமலை என்ற ராஜ் என்பவரின் மகன் *ஆறுமுகம் (21)* மறுகால்குறிச்சி நாங்குநேரி, என்பவர் அடிக்கடி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப* அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *நாங்குநேரி வட்ட காவல் நிலைய ஆய்வாளர் திரு.பொ. சபாபதி* அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி ஆறுமுகம் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 27.02.2020 தேதி அடைக்கப்பட்டார். *திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*

6 views0 comments
bottom of page