top of page

குடிநீர் ஏடிஎம் அறிமுகம்- ஒரு லிட்டர் குடிநீர் விலை ஒரு ரூபாய்...

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏடிஎம் குடிநீர் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த ஏ.டி.எம் குடிநீர் மையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக உதகமண்டலம் பகுதிக்குட்பட்ட 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியிலுள்ள 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலு, 11 பேரூராட்சிகளிலும் சுற்றுலாத்துறை சார்பில் 70 குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் தொட்டப்பட்ட, ஊட்டி படகு இல்லம், ஊட்டி பூங்கா பகுதிகள், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எளியோரின் தண்ணீர் தாகத்தை போக்கும் குடிநீர் ஏடிஎம் திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் கோடைகாலம் துவங்கவுள்ளதாக மக்கள் தண்ணீர் பருவது அவசியமன்று கருதி, கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 130 பகுதிகளில் இந்த குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும்.. கோயம்புத்தூர் மாவட்டங்களில் அமைக்கப்படும் குடிநீர் ஏடிஎம் மையங்களில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படும்...

6 views0 comments
bottom of page