காசநோய் விழிப்புணர்வு முகாம்..




தேசியகாசநோயகற்றும் திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகு இனைந்து வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இப் முகாமினை மருந்தாளுநர் பேச்சியம்மாள் வரவேற்று பேசினார் வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் *சுபாஷிணி* பேசுகையில் காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் என்றும் ஆனால் சிகிச்சை காலம் முழுவதும் தவறாது மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்றார். மேலும் காசநோயாளிகள் கண்ட இடங்களில் *எச்சில் துப்புதல்*, இருமல் வரும் சமயத்தில் *முககவசம்* அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார் காசநோயாளிகள் வீட்டில் உள்ள நபர்கள் அனைவரும் காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார் இம் முகாமில் செவிலியர் *ஜெனிட்டா* , பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர் *அர்ச்சுனன்*, நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இம் முகாகமை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் *காசி விஸ்வநாதன்* ஏற்பாடு செய்து இருந்தார் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் நன்றி கூறினார்