கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாநகர காவல்துறை சார்பாக காவலன் SOS செயலி பற்றிய விளக்க விழிப்புணர்வு...


“சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு” திருநெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாநகர காவல்துறை சார்பாக காவலன் SOS செயலி பற்றிய விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எனது உரையின் முக்கிய அம்சம்:
🎯செயலியை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்என்றும் ,எப்படி கையாள வேண்டும் என தெரிந்து கொள்வோம் .
🎯 நீங்கள் அறிந்ததை உங்கள்குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் .
🎯 மூத்த குடிமக்களின் பாதுகாப்பை காவலன் செயலி மூலம் உறுதி செய்யலாம்
🎯 காவலன் செயலி எப்போதும் உங்களுடன் இருக்கும் காவல்காரன் .
🎯மாநகர காவல் துறையின் தூதுவர்களாக மாணவ மாணவிகள் செயல்பட கேட்டுக் கொண்டேன்.
🎯உங்கள் படிப்பு வேலை போன்ற லட்சியங்களை எட்ட தடையாக உள்ளதை காவல்துறை உதவியுடன் எதிர் கொள்ளுங்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை The Consultanzy நிர்வாகி பத்மநாப கமல் மற்றும் சிறுவர் உதவிப் பிரிவு ஆய்வாளர் எழிலரசி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
“நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை”
#Kavalansos #Tirunelvelicitypolice
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்