கடந்த தொலைவு அதிகம்கடக்க வேண்டியது குறைவே... நெகிழ்ச்சி சம்பவம்

கடந்த தொலைவு அதிகம் கடக்க வேண்டியது குறைவே நடுங்கும் கால்களுக்கு சாலையைக் கடப்பதே மலைப்பை தருகிறது. கை கொடுக்க யாரேனும் வருவார்களா என பார்த்தபோது கரடு முரடான உருவம் தான்.. லத்தியை பிடித்து காப்பேறிய கைகள் தான்.. கரம் கொடுத்து கரை சேர்த்தது . பேராண்டி .. நல்லாயிருய்யா என்ற ஒத்தை வார்த்தையில் குற்றால சாரலாய் நனைந்து போனது அந்த காவலரின் மனசு..... இடம்- கொக்கிரகுளம் நாள் - 04-03-2020 பணியில் - தலைமைக்காவலர் பிலிப் ஜெயசீலன் Picture Courtesy - Muppidathi Nellai “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை “ என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்