top of page

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மேலப்பாளையம் சந்தைரவுண்டானாவில் மாடு கட்டும் போராட்டம்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுபடுத்தாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் மாடு கட்டும் போராட்டம் சந்தை ரவுண்டானாவில் மாட்டு கொட்டகை அமைத்து தர கோரிக்கை. நெல்லை மாவட்டம் முழுவதும் சாலைகளின் சுற்றிதிரியும் மாடுகளால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படுகிறது. இதுகுறித்து தொடர்ச்சியாக புகார் மனு கொடுத்ததும் நடவடிக்கை இல்லை. குறிப்பாக மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட அம்பை சாலையில் மாடுகள் அதிகமா சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி பாளை சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ் தலைமையில் சந்தை ரவுண்டானாவில் சுற்றிதிரியும் மாடுகளை சாலையில் கட்டிபோடும் ஆர்ப்பாட்டமும் அதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் சந்தை ரவுண்டானாவில் மாட்டு கொட்டகை அமைத்து தரவும் கோரிக்கை மனு அளிக்கபட்டது.இதில் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.ஹெல்மட்டுக்காக வாகன ஓட்டிகளை தினம் தினம் ஆய்வு செய்யும் காவல் துறையினர் மாடு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது ,பர்கிட் அலாவுதீன் பாளை தொகுதி செயலாளர் சலீம்தீன், இணை செயலாளர் புஹாரி, , பாப்புலர் பிரண்ட் பாளை தொகுதி தலைவர் இத்திரிஸ், பகுதி தலைவர் ராஜிக்பைஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாளை சிந்தா வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜவுளி காதர், அசன் பசிறி, எம்.எம்.காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

6 views0 comments
bottom of page