எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பாகமேலப்பாளையத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாநகராட்சியில். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக. எஸ்டிபிஐ கட்சியின். தொழிற்சங்க பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் டிரேடுயூனியன் சார்பாக மேலப்பாளையம் அலிய்யாமதரஸா எஸ்.டி.டி.யூ ஆட்டோ சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பஷீர்லால் அவர்கள் தலைமை வகித்தனர்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.பர்ணபாஸ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்கள். இதில் எஸ்.டி.டி.யூ மாவட்ட துணைத்தலைவர் கல்வத், மாவட்ட பொருளாளர் செய்யது, மாவட்ட செயற்க்குழ உறுப்பினர் பாளை ஜிந்தா, SDPI கட்சியின் பாளை தொகுதி இணை செயலாளர் புகாரி சேட். எஸ்.டி.டி.யூ கிளை தலைவர் மைதீன், கிளை செயலாளர் இப்ராஹீம் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். மேலும் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளலாக கலந்து கொண்டனர். சுமார் 1000த்துக்கும் மேற்பட்டோர்க்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.