எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் மேலப்பாளையம் மக்கள்.. கடும் நடவடிக்கை தேவை..
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அரசின் எச்சரிக்கையை துளியளவு கூட பொதுமக்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை... காய்கறி கடை, கறிக்கடை, மீன்கடை உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக கூடும் பொதுமக்கள் முககவசம் அணிவதில்லை, இடைவெளி விட்டு வரிசையில் நிற்பதில்லை. தேவையில்லாமல் தெருவில் இறங்கி சுற்றுவதும் என அஜாக்கிரதையாக உள்ளனர்.மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகளை கண்டுகொள்ளாத நிலை மட்டுமே உள்ளது. உடணடியாக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்..