top of page

உஷார் : மோசடியில் இது புதுசு ...

வங்கியிலிருந்து பேசவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தநிலையில் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக ஏமாற்றுக்கார்ரகள் புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளனர் . மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் ஏமாற்றுக்கார்ர்கள் LIC ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் சென்னை அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், மாண்புமிகு பாரதப் பிரதமரின் கறுப்பு பணம் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ரூ 45,500 உங்கள் வங்கி கணக்கில் போட உங்கள் வங்கியின் பெயர் மற்றும் கணக்கு என் விபரங்களை தரும்படி கேட்கின்றனர். மேலும, பணம் வரவு வைக்க குறைந்த பட்சம் ரூ2000 இருப்பு வைக்க பட வேண்டும் என கூறுகின்றனர் . எனவே இத்தகைய போலியான அழைப்பை புறந்தள்ளுங்கள். மேலும் , அழைப்பு வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகவும் விழிப்புடன் இருப்போம் என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம் .


21 views0 comments
bottom of page