உலக விபத்துகளால் உயிரிழந்தோர் தினம் ( நவம்பர் 17) சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு - விழிப்புணர்வு
திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக உலக விபத்துகளால் உயிரிழந்தோர் தினம் ( நவம்பர் 17) சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு - விழிப்புணர்வு பயிலரங்கமாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பபாளராக கலந்து கொண்டேன். எனது உரையின் முக்கிய அம்சம்- 🔸இந்தியாவில் நாட்டு எல்லையில் சண்டை போட்டு இறப்பவர்களை விட உள்நாட்டில் சாலை விபத்தால் இறப்பவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. 🔸தமிழகத்தில் மட்டும் சுமார் 13000 பேர் கடந்த ஆண்டு விபத்தால் மரணமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகரில் மட்டும் 80 பேர். 🔸 சாலை விதிகள் நம்மை காக்கவே. விபத்து உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல உங்கள குடும்பத்தையே உருக்குலைக்கும். 🔸 உங்கள் பெற்றோரை தலைக்கவசம் அணியச் செய்யுங்கள் . 🔸படிக்கட்டு பயணம் உங்களை பள்ளியில் சேர்க்காது. மருத்துவமனையில் தான் சேர்க்கும் என்பதை மறக்க வேண்டாம் 🔸காவல் துறையின் தூதுவர்களாக செயல்பட்டு திருநெல்வேலியை விபத்தில்லா நகரமாக்க துணை புரியுங்கள். “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவலர் துணை ஆணையர் சட்டம் &ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்
