top of page

உடனடி தேவை சமூக பொறுப்புணர்வு.





கொரோனா வைரஸ் தொற்றை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை.


திருநெல்வேலி மாநகரில் 144 தடையுத்தரவை மீறியதற்காக மூன்று நாட்களில் மட்டும் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை 15 நாட்கள் Home Quarantine என வீட்டில் இருக்க வலியுறுத்தியுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே சுற்றிய தச்சநல்லூர் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .


சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் . அலட்சியமாக இருந்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாக வேண்டாம். இதன் மூலம் உங்கள் பாஸ்போர்ட் முடக்கம் , வாகன உரிமம் சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.


“உங்களுக்காக நாங்கள் வெளியே

நாட்டுக்காக நீங்கள் உள்ளே”


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

5 views0 comments
bottom of page