இரத்த கொடையாளர் மாற்றுத்திறனாளியிடம் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட அரசு மருத்துவர்கள்...
திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனை இரத்த வங்கியானது முதல் தளத்தில் இயங்கி வருகிறது... விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு இரத்த வங்கி கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு மாற்றப்பட்டதால் இரத்த வங்கி அறை செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது... இதனால் இரத்தம் கொடுக்க சென்ற பதிவுத்துறை பணியாளரும் மாற்றுத்திறனாளியுமான வள்ளிநாயகம் இரத்த வங்கி அறைக்கு செல்ல முடியவில்லை... அவர் தனது திருநெல்வேலி மாவட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் நண்பரும் அரசு மருத்துவமனை ஊழியருமான பகவதி அவர்களிடம் விபரத்தை தெரிவித்தார்... பகவதி மூலம் இரத்த வங்கியின் தலைமை மருத்துவர் திருமதி.மணிமாலா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடன் ஒரு பணியாளர் திரு.கணேசன் அனுப்பி கீழ் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு வழியாக கதவு திறக்கப்பட்டு வள்ளிநாயகம் அவர்களை அழைத்து சென்று இரத்த வழங்க ஏற்பாடு செய்தனர்... *மாற்றுத்திறனாளியான திரு.வள்ளிநாயகம் இதுவரை 13 முறை இரத்த வழங்கியதை மருத்துவக்குழு பாராட்டி பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்*
